வரவிருக்கும் ஜனவரி 16-ம் தேதி பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். இது வெறும் கலாச்சார பயணம் மட்டுமல்ல, 2026 தேர்தலுக்கான ஒரு முக்கிய அரசியல் நகர்வாகும்.
தஞ்சை போன்ற ஒரு டெல்டா மாவட்டத்தில் அவர் பொங்கல் கொண்டாடுவது, விவசாயிகளுடனான பிணைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவர் நேரில் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும், இது கூட்டணி பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்கனவே நல்லுறவில் இருக்கும் பியூஷ் கோயல், தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகிப்பார்.
"அமித்ஷா சென்னைக்கு வந்து தி.நகரில் தங்கித் தேர்தல் பணிகளை கவனிக்கும்போது, தமிழக அரசு ஒருவித சவாலை உணரும்" என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
Edited by Siva