தமிழக வெற்றி கழகத்தின் ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டம், விஜய்யின் திரை பிம்பத்தையும் அரசியல் முதிர்ச்சியையும் இணைக்கும் ஒரு களமாக அமைந்தது.
ஒரு திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி போன்ற எனர்ஜியுடன், சுமார் 31 நிமிடங்கள் விஜய் ஆவேசமாக உரையாற்றினார். நவீன சமூக ஊடக யுகத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு 90 விநாடிகளுக்கும் ஒரு சுவாரசியமான கருத்து இடம்பெறும் வகையில் அவரது உரை வடிவமைக்கப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அனுபவம், 35,000-க்கும் மேற்பட்டோர் கூடிய இந்த நிகழ்வை எவ்வித பாதுகாப்பு குளறுபடிகளுமின்றி நடத்த உதவியது. இது சீனியர் தலைவர்களுக்கு தவெக-வில் உரிய மரியாதை உண்டு என்ற செய்தியை பிற கட்சியினருக்கு உணர்த்தியது.
விஜய் முதல் முறையாக மேடையில் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தியதோடு, "தீய சக்தி திமுக" என்ற முழக்கத்தையும் கையில் எடுத்தார். அதிமுக களத்திலேயே இல்லை என்று குறிப்பிட்டதன் மூலம், 2026 தேர்தல் போட்டி என்பது "திமுக vs தவெக" தான் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
இதன் மூலம் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியை தன்பக்கம் இழுக்கும் 'பொலிட்டிக்கல் பிராண்டிங்' உத்தியை விஜய் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார் என விஜய்யின் பேச்சை அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்கின்றனர்.
Edited by Siva