இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடித்துவரும் திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மிக பிரம்மாண்டமாக ஆரம்பமானது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் கேரளா, ஹைதராபாத், கோவா மற்றும் சென்னை என பல்வேறு இடங்களில் மிக பிரம்மாண்டமாகவே நடைபெற்றுவந்தது. இந்த படம் 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியை அடிப்படையாக கொண்டு உருவாகிவருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன் (Ramya krishnan), மிர்னா மேனன், யோகி பாபு, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வந்த நிலையில், பாடல்கள் அனைத்தும் தரமாக வந்திருப்பதாக அனிருத் தெரிவித்திருந்தார்.
மேலும் ஜெயிலர் 1ன் படத்தில் காவாலையா பாடலை போல, இந்த ஜெயிலர் 2 படத்திலும் சிறப்பு பாடல் ஒன்று உருவாகியுள்ளதாம். இந்த பாடலுக்கு பாலிவுட் நடிகை ஒருவர் நடமாடிவருகிறாராம். அந்த நடிகை வேறு யாராயுமில்லை, காஞ்சனா 4ல் நடிக்கும் “நோரா ஃபதேஹி” (Nora Fatehi ) நடனமாடுகிறார் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: 2026-ம் ஆண்டு வெளியாகும் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடிக்கும் படம் – அர்ச்சனா கல்பாத்தி
#Jailer2 Buzz 🤯#NoraFatehi joins chennai schedule for a high octane dance number 🤩🔥#Rajinikanth #Anirudh #Mohanlal pic.twitter.com/HQ6S5X5WMi
— Kolly Corner (@kollycorner)
நடிகை நோரா ஃபதேஹி பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் தமிழில் காஞ்சனா 4 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். மேலும் இவர் ஏற்கனவே கார்த்தியின் தோழா என்ற படத்தில் டோர் நம்பர் சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். இந்நிலையில் அப்படத்தை அடுத்ததாக தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடுகிறாராம்.
இதையும் படிங்க: 2025ல் அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் யார் தெரியுமா? இவர்தான் முதலிடமா?
இவர் இந்த பாடலுக்கு பல்வேறு நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடுவதாக கூறப்படுகிறது. தற்போது இப்பாடலின் ஷூட்டிங் சென்னையில் சிறப்பாக நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் குறித்து பத்திரிக்கை ஒன்றில் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் 2 படத்தின் பாடல்கள் குறித்து அனிருத் அப்டேட் :சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனிருத்திடம் ஜெயிலர் 2 படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதில் பேசிய அவர், ஜெயிலர் 2 படத்தின் பாடல்கள் எல்லாம் சிறப்பாக வந்திருப்பதாகவும், நிச்சயம் மக்கள் அனைவரும் விரும்பும் பாடலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.