20 ஆண்டுகளைக் கடந்தது விஷாலின் சண்டக்கோழி படம்… லிங்குசாமி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
TV9 Tamil News December 17, 2025 01:48 AM

தமிழ் சினிமாவில் கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சண்டகோழி. இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்த சண்டகோழி படத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால், ராஜா, சுமன் ஷெட்டி, கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், ஜான் அமிர்தராஜ், ஜெய முரளி, சண்முகராஜன், தென்னவன், காதல் தண்டபாணி, ஜார்ஜ் மேரியன், மு ராமசாமி, மோனிகா, விதார்த், இளங்கோ குமாரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜி கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பாக தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணா தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் படம் குறித்து இயக்குநர் லிங்குசாமி நெகிழ்ச்சிப் பதிவு வெளியிட்டுள்ளது.

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி:

அதன்படி அந்த எக்ஸ் தள பதிவில் இயக்குநர் லிங்குசாமி கூறியதாவது, 2- ஆண்டுகால சண்டகோழி படத்தின் மீது உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி என்று தெரிவித்து இருந்தார். மேலும் இந்த மகிழ்ச்சியை நடிகர்கள் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரன், லால் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

Also Read… Year Ender: 2025ல் அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் யார் தெரியுமா? இவர்தான் முதலிடமா?

லிங்குசாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Thank you for all the love #20YearsOfSandakozhi

Sharing my joy with #gkfilms @VishalKOfficial @thisisysr #meerajasmine #Rajkiran sir & the entire team. #Lal sir, @VffVishal @itisbose #niravshah #kanalkannan @johnsoncinepro pic.twitter.com/ZacW0NrljD

— Lingusamy (@dirlingusamy)

Also Read… கொம்புசீவி பட நடிகை யார் தெரியுமா? நாட்டாமை பட நடிகையின் மகளாம்- வெளிப்படையாக சொன்ன இயக்குநர் பொன்ராம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.