பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா.. மோடி, ஸ்டாலின் கலந்து கொள்கிறார்களா?
WEBDUNIA TAMIL December 17, 2025 01:48 AM

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், பூந்தமல்லி முதல் போரூர் சந்திப்பு வரையிலான முதல் வழித்தட பகுதியின் தொடக்க விழா விரைவில் நடைபெற உள்ளது. சுமார் 10 கி.மீ. தொலைவுக்கான இந்த வழித்தடப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளார்.

சென்னையில் 116 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படும் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது. இந்த வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் நிலையில், இந்த தொடக்க விழாவில் அவர் கலந்துகொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.