மேற்கு வங்க மாநில விளையாட்டு துறை அமைச்சர் அருப் பிஸ்வாஸ், கொல்கத்தாவில் நடந்த லியோனல் மெஸ்ஸி நிகழ்வை நிர்வகித்ததில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநில அரசு கடுமையான நிர்வாக நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குநர் ராஜீவ் குமார், பிதான்நகர் காவல்துறை ஆணையர் முகேஷ் குமார் மற்றும் முதன்மை செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா ஆகியோருக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், துணைக்காவல்துறை ஆணையர் அனீஷ் சர்க்கார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மைதானத்தில் ரசிகர்களின் பெரிய அளவிலான ஒழுங்கீனம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கேள்விகள் எழுந்தன. இது குறித்து முழுமையாக விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பாஜக, 'செல்ஃபி-ஸ்ரீ' அமைச்சர் என அருப் பிஸ்வாஸை கிண்டல் செய்து, இதுவரை எந்த கைது நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
Edited by Siva