2025-ல் ஹைப் ஏத்தி ரசிகர்களை சோதித்த 6 திரைப்படங்கள்!.. ஒரு பார்வை…
CineReporters Tamil December 17, 2025 12:48 AM

2025ம் வருடம் முடிவடையவுள்ள நிலையில் இந்த வருடம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஆனால் அவர்களை கவர தவறிய 6 திரைப்படங்கள் பற்றி இங்கு பார்ப்போம்:

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம்தான் தக் லைப். நாயகன் வெளியாகி 36 வருடங்களுக்கு பின் மணிரத்னமும் கமலும் இணைந்ததால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உண்டானது. ஆனால் படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதால் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் தோல்வியடைந்தது. இந்த படத்தை தயாரித்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டமும் ஏற்பட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்து பேன் இண்டியா திரைப்படமாக வெளியானது கூலி. லோகேஷுடன் ரஜினி கூட்டணி அமைத்ததால் இந்த படத்திற்கு பெரிய ஹைப் உருவானது. ஆனால் படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. சமூகவலைத்தளங்களில் பலரும் இப்படத்தை ட்ரோல் செய்தார்கள்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜுனும் நடித்திருந்தனர். Break Down என்கிற ஆங்கில படத்தின் ரீமேக்காக வெளிவந்த இந்த படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

அருண் இயக்கத்தில் சியான் விக்ரம், துஷரா விஜயன், மலையாள நடிகர் சுராஜ் வஞ்சரமுடு, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இந்த படம் விக்ரமுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் தோல்வி அடைந்தது.

தனுஷ் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தில் சத்யராஜ், அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் சிறப்பு வேடத்தில் ராஜ்கிரணும், தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனனும் நடித்திருந்தனர். இந்த படத்தை கிரின்ச் என ரசிகர்கள் ட்ரோல் செய்ததால் படம் ஹிட் அடிக்கவில்லை.

நான்கு வருடங்கள் கழித்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம்தான் மதராஸி. சிவகார்த்திகேயனுக்கு ஒரு பக்கா ஆக்சன் படமாக இப்படம் வெளியானாலும் ஏனோ இந்த படம் ரசிகர்களை கவரவில்லை.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.