கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில், உலகளவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) பல வேலைகளைச் செய்யத் தொடங்கியுள்ளது என்றும், இந்தச் சமூகமும் படிப்படியாக AI தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டது என்றும் கூறியுள்ளார்.
இந்தச் சூழலில், எந்த ஒருத் துறையும் AI-யில் இருந்துத் தப்ப முடியாது. “AI-க்கு ஏற்ற வகையில் நாம் நம்முடைய திறமைகளை மேம்படுத்திக் கொண்டால், பணிநீக்கம் உள்ளிட்ட ஆபத்துகளில் இருந்துத் தப்பிக்க முடியும்” என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.