டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்..!
Seithipunal Tamil December 15, 2025 08:48 AM

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தேவரமாக களமிறங்கியுள்ளனர். அதனபடி, தமிழகத்தில் பாஜகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

இதன் ஒருபகுதியாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று டெல்லி சென்றார்.அங்கு அவர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், கருப்பு முருகானந்தம் ஆகியோரும் உடன் இருந்தனர். 

இதன் போது தமிழக அரசியல் சூழல் குறித்தும் சட்டமன்ற தேர்தல் குறித்தும் நிதி அமைச்சர் நிர்மலா சீதமனுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில், இன்று இரவு 09 மணியளவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி விவகாரம் குறித்து அமித்ஷாவுடன் ஆலோசிக்கப்பட்டதாகவும், பாஜக தொகுதி விருப்பப் பட்டியலை அமித்ஷாவிடம் நயினார் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்துடன், நயினார் நாகேந்திரனின் தொகுதி வாரியான பிரசார நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அழைப்பும் விடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.