கண் பார்வைக்கு அதிகம் உதவுகிறது இந்த பழ தண்ணீர்
Top Tamil News December 15, 2025 09:48 AM

பொதுவாக பப்பாளி சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை சேர்க்கும் .இந்த பப்பாளியில் நிறைய விட்டமின்கள் உள்ளன ,
பப்பாளியை நாம் தண்ணீரில் கொதிக்க வைக்கும் போதெல்லாம் அதில் உள்ள பாப்பைன் அப்படியே உள்ளது. இது சீரான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. வீக்கம், வாயு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்லது.மேலும் இதன் மூலம் நம் உடல் பெரும் பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.பொதுவாக சிலருக்கு உடல் எடை அதிகமிருக்கும் .அவர்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால்  இந்த பப்பாளி தண்ணீரை அதிகாலையில் குடித்து வரலாம். 
2.இந்த பப்பாளி தண்ணீர் உங்களுடைய குடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை சுத்தப்படுத்தவும் அதை உடலிலிருந்து வெளியேற்றவும் உதவுகிறது.
3.இந்த பப்பாளி பழ தண்ணீரை பப்பாளிப்பழ துண்டுகள் சேர்த்து சாப்பிட வேண்டும். இது அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிரைய உள்ளது . 
4.இந்த பப்பாளி தண்ணீர்  உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 
5.இந்த தண்ணீரில் பாப்பைன் என்ற என்சைம் இருக்கிறது. இது குடலுக்கு நல்லது. குடலில் இருக்கக்கூடிய நச்சுகளை நீக்கும் ஆற்றல் கொண்டது .
6.இந்த  பப்பாளி தண்ணீரில்  வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது.  பல்வேறு நோய்களுக்கு எதிராக போராடுகிறது.
7.இந்த  பப்பாளி தண்ணீரில் பீட்டா கரோட்டின் அதிக அளவில் உள்ளது. 
8.மேலும் இந்த  பப்பாளி தண்ணீரில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ கண் பார்வைக்கு அதிகம் உதவுகிறது.
9.மேலும் இந்த  பப்பாளி தண்ணீரில் பாப்பைன் எனப்படும் புரோட்டீஸ் நொதி உள்ளது. இது நாம் சாப்பிடக்கூடிய புரதத்தை ஜீரணிக்க உதவுகிறது. 
10.இந்த  பப்பாளி தண்ணீரில் வெப்பத்தை எதிர்க்கும் தன்மை கொண்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.