ரஜினிகாந்தின் 1999ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் படையப்பா — ரசிகர்கள் இதுவரை மறக்காத ஆல்டைம் கிளாசிக். ரம்யா கிருஷ்ணனின் மிரட்டலான ‘நீலாம்பரி’ நடிப்பு, ஏ.ஆர். ரஹ்மானின் இசை, கே.எஸ். ரவிக்குமாரின் கமர்ஷியல் மசாலா இயக்கம், ரஜினியின் கம்பீரம் — எல்லாமும் இணைந்து அந்த படத்தை காலத்தால் அழியாத படைப்பாக மாற்றிவிட்டது.
ரஜினியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ரீ-ரிலீஸ் ஆன படையப்பாவுக்கு ரசிகர்கள் செம்ம வரவேற்பு அளித்தனர். ஜெனரேஷன் Z ரசிகர்களும் கூட தியேட்டரில் முதல் முறையாக படத்தை பார்த்து குதூகலித்தனர்.
இதனிடையே, ரஜினியே தானாக வெளிப்படுத்திய ஒரு தகவல் அனைவரையும் உற்சாகப்படுத்தியது —“படையப்பா 2 குறித்து கதை விவாதம் நடக்கிறது. அனைத்தும் சரியாக அமைந்தால் அது ரசிகர்களுக்கு திருவிழா!”
இந்த அறிவிப்பைப் பின்தொடர்ந்து, படத்தில் காமெடியில் கலக்கிய செந்திலும் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.அங்காள பரமேஸ்வரி கோயிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“படையப்பா 2 எடுத்தால், என்னைக் கொண்டு அதே கேரக்டராக வைத்தாலும் சரி… பக்கத்தில் நிற்கும்படி வைத்தாலும் சரி… நான் கண்டிப்பாக நடிப்பேன்!”என்று கூறி ரசிகர்களையும், சினிமா பிரியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்த செந்தில், சமீபத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். குறிப்பாக ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால்சலாம் படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து கவனம் ஈர்த்தார்.
படையப்பா 2 உருவானால் — ரஜினியின் ஸ்டைல் + ரம்யாவின் கரக்டரின் மறுஉயிர்ப்பு + செந்திலின் காமெடி = ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு திருவிழா என்பதில் சந்தேகமே இல்லை.