ரஷியாவின் மாஸ்கோ நகரை ஒட்டிய ஒடின்ட்சோவோ மாவட்டம் கோர்கி-2 கிராமத்தில் உள்ள பள்ளியில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. அங்கு படிக்கும் திமோதி என்ற 15 வயது மாணவன், சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் கண்டித்ததால் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. அந்த கோபத்துடன் நேற்று பள்ளிக்கு வந்த அவன், பையில் கத்தி மற்றும் மிளகு ஸ்பிரேவை மறைத்து எடுத்துச் சென்றுள்ளான். பள்ளியில் ஆசிரியை ஒருவரிடம் நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் எனக் கேட்டு, குழப்பம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் சம்பவ இடத்துக்கு வந்த பள்ளி பாதுகாவலர் டிமிட்ரி பாவ்லவ் மீது திடீரென மிளகு ஸ்பிரே அடித்து, கீழே விழுந்த அவரை கத்தியால் தாக்கியுள்ளான். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அருகில் இருந்த மற்ற மாணவர்களையும் கத்தியால் குத்தியுள்ளான். இந்த தாக்குதலில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அதைவிட கொடூரமாக, அந்த சிறுவனின் உடலின் முன்பாக நின்று திமோதி செல்பி எடுத்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பறைகளுக்குள் ஓடி தஞ்சமடைந்தனர். திமோதி அணிந்திருந்த டி-சர்ட்டில் “உயிர்கள் முக்கியம் இல்லை” என்று எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. முககவசம், ஹெல்மெட் அணிந்து திட்டமிட்டே பள்ளிக்கு வந்துள்ளான். ரஷியாவில் பள்ளி தாக்குதல்கள் அரிது என்றாலும், சமீப ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு செல்யாபின்ஸ்க் நகரில் சுத்தியலால் மாணவன் தாக்கியதில் 4 பேர் காயமடைந்த சம்பவமும் நினைவுகூரப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!