சமூக வலைதளம் ஒன்றில் வெளியான காணொளி, தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காணொளியில் பேசிய திருநங்கை ஒருவர், தான் ஓரமாக நிறுத்தி வைத்திருந்த கார் மீது இளைஞர்கள் இருவர் முட்டைகளை அடித்துச் சென்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கிய ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) பற்றிப் பேசியதால்தான் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது.