தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள் பிற கட்சிகளில் இணைவது மற்றும் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் அதிமுகவிலிருந்து பலர் விலகி திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது இதற்கு பதிலடியாக திமுகவினரை அதிமுகவில் இணைத்துள்ளனர்.
அதன்படி விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கே. கணேஷ் பாண்டி உட்பட 200-க்கும் மேற்பட்டோர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். மேலும் இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.