விஜய் வர்றாரு...நாளை இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை.. தேர்வு ஒத்திவைப்பு!
Dinamaalai December 17, 2025 10:48 AM

விஜய் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள பாரதி மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நாளை மறுநாள் வியாழக்கிழமை ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் உள்ள சுங்கச்சாவடி அருகே பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இந்த கூட்டம் நடக்கிறது. 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்துக்கு அனுமதி கோரி காவல்துறை 84 கேள்விகள் எழுப்பியது. அதற்கான விளக்கங்கள் மற்றும் ஆவணங்களை த.வெ.க. தரப்பினர் சமர்ப்பித்தனர். இதற்கிடையே கோவில் நிர்வாக அனுமதி பெறப்படவில்லை என கோவில் செயல் அலுவலர் கடிதம் அனுப்பினார். இதனால் தடையில்லா சான்று பெற போலீசார் அறிவுறுத்தினர். கோவில் நிர்வாகம் விதித்த 5 கட்டுப்பாடுகளை த.வெ.க. ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியது. அதன்பேரில் ஈரோடு மாவட்ட போலீசார் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்தனர்.

கூட்டத்துக்கான மேடை மற்றும் மைதான பணிகள் நேற்று முதல் தீவிரமாக நடக்கின்றன. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயாராக வைக்கப்படும். பெண்கள் பாதுகாப்பாக அமர தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே நேரத்தில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள பாரதி மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு 18ம் தேதி ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று நடைபெற இருந்த தேர்வுகள் 26ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.