சமீப காலமாக டிஜிட்டல் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வங்கி அதிகாரிகள் போல பேசி, கடவுச்சொற்களை வாங்கி, கணக்கிலிருந்த பணத்தை பறிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன. இதனை தடுக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், புதிய மோசடி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மத்திய அரசின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 2025 முடிவடைய உள்ளதால், உடனே லிங்கை அழுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் கிடைக்காது என கூறி பலரையும் அந்த பதிவை பகிர வைக்கின்றனர்.

இந்த தகவல் முற்றிலும் போலியானது என தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில், இதுபோன்ற எந்த திட்டமும் மத்திய அரசு சார்பில் இல்லை என தெரிவித்துள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகமான லிங்குகளை அழுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!