ரசிகர்கள் அதிர்ச்சி... நட்சத்திர கால்பந்து வீரர் மரியோ பினிடா படுகொலை!
Dinamaalai December 19, 2025 01:48 AM

ஈக்வடாரின் குவாயாகில் நகரில் பார்சிலோனா டி குவாயாகில் அணியின் டிஃபென்டர் மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். கடை வீதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகே அடையாளம் காணாத மற்றொருவரின் உடலும் கிடைத்துள்ளது.

33 வயதான மரியோ பினிடா, இன்டிபென்டியென்ட் டெல் வாலே அணியில் இருந்து கால்பந்து வாழ்க்கையை தொடங்கினார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக பார்சிலோனா டி குவாயாகில் அணிக்காக விளையாடி வந்தார். லோன் அடிப்படையில் பிற கிளப்புகளிலும் ஆடியுள்ளார்.

இந்த கொலை கால்பந்து உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிளப் நிர்வாகமும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஈக்வடாரில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.