Health Tips: குழந்தைகள் இருக்கும் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கலாமா? மருத்துவர் ஹரிணி ஸ்ரீ விளக்கம்!
TV9 Tamil News December 19, 2025 01:48 AM

வீட்டில் சிறு குழந்தைகள் இருக்கும்போது செல்லப்பிராணி (Pets) வளர்ப்பது பாதுகாப்பானதா என்றே கேள்வி பலருக்கும் எழுகிறது. வீட்டில் சிறு குழந்தைகள் இருக்கும்போது பெற்றோர்கள் பெரும்பாலும் ஒரு செல்லப்பிராணிகளை தத்தெடுப்பதற்கு முன்பு ஒருமுறைக்கு இரு முறை யோசிப்பது முக்கியம். ஏனெனில், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை (Childrens) பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்பதற்காக வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதை தவிர்க்கிறார்கள். ஒரு விலங்கின் ரோமம், நகங்கள் அல்லது பற்கள் உங்கள் குழந்தைக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்று அஞ்சும் பெற்றோரில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்கலாமா என்பது குறித்து, பிரபல குழந்தைகள் மருத்துவர் ஹரிணி ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ALSO READ: உரிமம் இல்லாத செல்லப்பிராணிகளுக்கு ரூ.5000 அபராதம்.. 15 குழுக்களை அமைத்த சென்னை மாநகராட்சி..

குழந்தைகள் இருக்கும் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்கலாமா?

View this post on Instagram

A post shared by Dr C M Harini Sree(MD Paed.,FNNF(Neo)) (@dr_harini_sree_paediatrician)


குழந்தைகள் இருக்கும் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்கலாமா என்ற கேள்விக்கு முதலில் வேண்டாம் என்பதே நல்லது. அதேநேரத்தில், கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த 4 விஷயத்தை மேற்கொள்வது நல்லது.

5 வயதுக்கு மேல்..

உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 5 வயதிற்கு மேல் இருந்தால் மட்டுமே செல்லப்பிராணிகளை வளர்ப்பது நல்லது. அதுவே, 5 வயதிற்குள் இருந்தால் செல்லப்பிராணிகளை வளர்க்காமல் இருப்பது பாதுகாப்பானது. அதேபோல், 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீட்டில் செல்லப்பிராணிகள் இருக்கும்போது, அந்த செல்லப்பிராணிகளுக்கு உணவு வைத்தல், கொஞ்சுதல், வெளியே அழைத்து செல்லுதல் போன்றவற்றை செய்ய பழக்கப்படுத்துங்கள். இது குழந்தைகளுக்கு பொறுப்பு மற்றும் பிற உயிர்களுக்கு உரிய மதிப்பை வளர்க்க கற்று கொடுக்கும்.

கை கழுவுதல்:

செல்லப்பிராணிகளை தொட்டால் நீங்களாக இருந்தாலும் சரி, குழந்தைகளாக இருந்தாலும் சரி சோப்பு போட்டு கைகளை கழுவ பழக்க படுத்துங்கள். இது பாக்டீரியா மற்றும் செல்லப்பிராணி அலர்ஜி குழந்தைக்கு ஏற்படாமல் இருப்பதை தடுக்கும். செல்லப்பிராணிக்கு தடுப்பூசி போடுவதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

ALSO READ: வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாதவை.. இது ஆரோக்கியத்தை கெடுக்கும்..!

செல்லப்பிராணிகளை தொந்தரவு செய்யாதீர்கள்:

செல்லப்பிராணிகள் நன்றாக தூங்கும்போது குழந்தைகள் அவற்றை தொந்தரவு செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள். செல்லப்பிராணிகளுக்கு போதுமான ஓய்வு கொடுப்பது முக்கியம். இதுமட்டுமின்றி, செல்லப்பிராணிகள் தூங்கும்போதோ அல்லது சாப்பிடும்போதோ குழந்தைகள் தொந்தரவு செய்யும்போது தாக்கவும் வாய்ப்புள்ளது.

வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது:

செல்லப்பிராணிகளை எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் வீட்டிற்கு ப்ரீயாக நடமாட அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக படுக்கறைக்குள் எக்காரணத்தை கொண்டும் விடக்கூடாது. ஏனெனில், செல்லப்பிராணிகளில் இருந்து உதிரும் முடி குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்சனையை உண்டாக்கலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.