புதுடெல்லி, டிசம்பர் 18 : இந்திய சாலைகளில் பயணம் செய்ய வேண்டும் என்றால் சுங்கச்சாவடிகள் (Toll Gate) மிக அவசியமான ஒன்றாக உள்ளது. சுங்கச்சாவடிகளை கடந்துச் செல்லும்போது வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் செலுத்தும் முறையை எளிதானதாகவும், விரைவானதாகவும் மாற்ற மத்திய (Central Government) அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இனி செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய அமைச்சர் நிதின் கட்காரிமாநிலங்களை கேள்வி நேரத்தில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதி கட்காரி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை குறித்து சில முக்கியமான தகவல்களை தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டியது இருந்ததால், அதற்கு 3முதல் 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. பாஸ்டேக் (Fastag) வந்த பிறகு அதற்கான நேரம் வெறும் 60 விநாடிகளாக குறைக்கப்பட்டது. இதன் மூலம் நமது வருவாய் ரூ.5 கோடி அதிகரித்தது.
இதையும் படிங்க : டிஜிட்டல் கைது…பெண் விரிவுரையாளருக்கு செக்…பறிபோன ரூ.2 கோடி!
செயற்கை நுண்ணறிவு முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும்தற்போது எம்.எல்.எப்.எப் என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் டிஜிட்டல் கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகமாக உள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் இந்த முறை அமலுக்கு வர உள்ளது. இந்த மூலம் வாகனங்கள் மணிக்கு சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சுங்கச்சாவடிகளை கடக்கலாம். சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி செல்ல வேண்டிய தேவை இல்லை என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : மாரடைப்பால் துடிதுடித்த கணவன்.. நடுரோட்டில் உதவிக்கேட்டு பரிதவித்த மனைவி.. மரித்த மனிதநேயம்
அரசின் வருவாய் ரூ.6 கோடியாக அதிகரிக்கும் – நிதின் கட்காரிவாகன நம்பர் பிளேட்டுகள், ஏஐ உடன் செயற்கைக்கோள் மூலம் அடையாளம் காணப்பட்டு ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும். அந்த திட்டத்தின் மூலம் எரிபொருளில் ரூ.1,500 கோடி சேமிக்கப்படும். இதன் மூலம் அரசின் வருவாய் ரூ.6 கோடியாக அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.