சினிமாவில் எந்த திரைப்படம் வெற்றி பெறும், எந்த படம் தோல்வி அடையும் என கணிக்கவே முடியாது. ஒரு படத்தின் வெற்றி என்பது ஒரு மேஜிக் போல நிகழும். நல்ல கதை, அதற்கு ஏற்ற திரைக்கதை. சரியான நடிகர், நடிகைகள், அதை சரியாக இயக்கும் இயக்குனர் என எல்லாம் பொருந்தி வர வேண்டும். ஏதோனும் ஒன்று சரியாக அமையாவிட்டாலும் படம் தோல்வியடையும்.
கதை, திரைக்கதை சரியாக இல்லையெனில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் படம் வெற்றி பெறாது. 60களில் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்ஜிஆர், நடிகர் திலகமாக இருந்த சிவாஜி கணேசன், இப்போது வரை சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி கூட தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார்கள்..
நடிகர் ரஜினி தயாரித்து நடித்த பாபா திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய போது அந்த நஷ்ட பணத்தை திருப்பி கொடுத்தார் ரஜினி. அதன்பின்னரே தற்போது சிலர் சினிமா துறையில் சிலர் மட்டும் அதை பின்பற்றி வருகிறார்கள். ஆனால் எல்லோரும் அதை செய்வதில்லை.
ஒரு தயாரிப்பாளர் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பித் தரலாம். ஆனால் ஒரு நடிகருக்கு நஷடத்தில் பங்கு இல்லை. ஆனால் கேப்டன் விஜயகாந்த் தனது படத்திற்கான நஷ்டத்தில் தான் பங்கெடுத்து கொள்வார்.
தமிழில் சில படங்களை தயாரிப்பாளர் கே.எல்.அழகப்பன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜயகாந்த் சார் படம் நடித்து அந்த படம் நஷ்டம் ஆயிடுச்சுன்னா தயாரிப்பாளரை கூப்பிட்டு உங்கள் தயாரிப்பில் நான் மீண்டும் நடிக்கிறேன்.. எனக்கு 5 ஆயிரம் சம்பளம் குறைவக கொடுங்கள்’ என சொல்வார். அப்போது அவருடைய சம்பளம் 40 ஆயிரம், 50 ஆயிரமாகத்தான் இருந்தது’ என்று சொல்லியிருக்கிறார்.