ராஜஸ்தான் மருந்து கட்டுப்பாட்டு துறை நடத்திய ஆய்வில், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் ஒவ்வாமை உள்ளிட்ட நோய்களுக்காக பயன்படுத்தப்படும் ஐந்து முக்கிய மருந்துகள் தரம் குறைந்தவை என கண்டறியப்பட்டு, மாநிலம் முழுவதும் அவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தின் ஒய்.எல். பார்மா தயாரிப்பான Vincet-L மற்றும் Ofwin-200 லைஃப்கேர் நிறுவனத்தின் Dulcovog-0.3 mg மஸ்கான் லைஃப் சயின்ஸின் Telpin-A மற்றும் அக்ரான் ரெமெடிஸ் தயாரித்த குழந்தைகளுக்கான Cefixime மருந்து ஆகியவை தரமற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் தோல்பூரில் தயாரிக்கப்பட்ட அறுவை சிகிச்சை கையுறைகளும் தரம் குறைவாக இருந்ததால் சந்தையிலிருந்து திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில நிறுவனங்கள் ஏற்கனவே கடந்த காலங்களில் தரமற்ற மருந்துகளை தயாரித்த புகாரில் சிக்கியுள்ளன. நோயாளிகளின் பாதுகாப்பை கருதி, இந்த மருந்துகளை விற்பனை செய்யவோ விநியோகிக்கவோ கூடாது என மருந்து விற்பனையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தரமற்ற மருந்துகளால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சுகாதார அபாயங்களை தவிர்க்க, சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Edited by Siva