தவெக கொள்கை பரப்பு செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனரும் லாட்டரி அதிபர் கோவை மார்ட்டினின் மகனுமான சார்லஸ் மார்ட்டின் புதிதாகத் தொடங்கியிருக்கும் லட்சிய ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ளார் நடிகர் தாடி பாலாஜி.
ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்த பாலாஜி, தவெகவை விஜய் தொடங்கிய போது அவருக்கு ஆதரவாகப் பேசினார்.
தவெகவின் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். எனினும் கட்சியில் முறையாக இணைந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் விஜய் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்தி பரபரப்பு கூட்டினார்.
இந்தச் சூழலில் தற்போது திடீரென சார்லஸ் தொடங்கியிருக்கும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
பாலாஜியிடம் பேசினோம்.
''எத்தனை நாள்தான் நானும் பொறுத்துட்டிருக்கிறது. மரியாதை எங்க கிடைக்குதோ அங்க போறது தானே மனுஷ இயல்பு.
'அவரைக் கூப்பிடாதீங்க'னு எல்லார்கிட்டயும் சொல்லியிருக்காராம்’ - தாடி பாலாஜி vs தவெக பஞ்சாயத்துதளபதி கட்சி தொடங்கினப்ப அவ்வளவு சந்தோஷப்பட்டேன். அதனால அவர் கூப்பிடாமலே போய் சில வேலைகளைச் செஞ்சேன். பேரைப் பச்சை குத்தினேன். பதவி எதையும் எதிர்பார்த்து அதைச் செய்யலைதான். ஆனா அவர் ஒரு நல்ல நோக்கத்துடன் ஒரு பயணத்தைத் தொடங்கியிருக்கிறப்ப, அதுக்கு அணில் மாதிரி நானும் உதவாலாம்னு நினைச்சேன். இந்த இடத்துல நீங்க வேற எதையாச்சும் நினைச்சீங்கன்னா நான் பொறுப்பில்ல. ஆனா என்னால அது கூட முடியல.
Aadhav
சுத்தி இருந்த ரெண்டாம் கட்ட ஆளுங்க கண்டுக்கவே இல்ல. மதிக்கவே மாட்டேங்குறாங்க. அவங்கதான் சரியில்ல. அவங்க சரியா இல்லாததாலதான் கட்சிக்குப் பல பிரச்னைகள்.
ஒரேயொரு தடவை தளபதியைப் பார்க்க பத்து நிமிஷம் கிடைச்சாக் கூட என் மனசுல இருந்ததைக் கொட்டியிருப்பேன். ஆனா முடியலை. பிறகுதான் தெரிஞ்சுகிட்டேன் எஸ்.ஏ. சந்திரசேகர் சார் அவரைப் பார்க்கணும்னாலே இதுதான் இப்ப நிலைமனு.
அவரை விடவா நான் தளபதிக்கு நெருக்கம்? அதனால முயற்சியை கை விட்டுட்டேன்.
இந்தச் சூழலில் எதேச்சையா சார்லஸ் சாரைச் சந்திக்க வாய்ப்பு கிடைச்சது. முதல் சந்திப்புலயே 'வாங்க பாலாஜி , சேர்ந்து செயல்படலாம்'னு வாஞ்சையோட கூப்பிட்டார். அவர் வரவேற்ற விதமே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால சேர்ந்துட்டேன்" என்றவரிடம்,
"ஆதவ் அர்ஜுனுடனான பிரச்னையால்தான் இந்தக் கட்சியில் சேர்ந்தீர்கள் எனச் சொல்ல மாட்டார்களா" என்றோம்.
"தவெக ஆதரவு மன நிலையில் நான் இருந்தப்ப ஒரு முறை கூட நான் ஆதவைச் சந்திச்சுப் பேசினதே இல்லை. போன் பண்ணினா எடுக்கவே மாட்டார். அதனால இந்த மாதிரி குற்றச்சாட்டு வந்தா அதுல அர்த்தம் இல்லை. சொல்றங்க என்ன வேம்ணும்னாலும் சொல்லிட்டுப் போகட்டும்" என்கிறார்.
தவெக: "அண்ணாமலை கம்முனு இருந்திருந்தால் இந்நேரம் பதவி தொடர்ந்திருக்கும்" - அருண்ராஜ்