இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு காணொளி, பார்ப்பவர்களை ஒரே நேரத்தில் ஆச்சரியத்திலும் திகைப்பிலும் ஆழ்த்தியுள்ளது. மின்சாரக் கம்பியில் சிக்கி எதிர்பாராத விதமாக உயிரிழந்த ஒரு வவ்வாலை, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் மீட்டு எடுத்து வந்து தரையில் வைத்துப் பதிவு செய்துள்ளனர். பொதுவாக வவ்வால்கள் சிறிய அளவில் இருப்பதை மட்டுமே நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்தக் காணொளியில் உள்ள வவ்வால் பெரிதாக இருப்பதால் அனைவரும் மிரண்டு போயுள்ளனர்.
View this post on InstagramA post shared by சின்ன கண்ணு (@chinnakannu_talks)
இந்த வவ்வாலின் அகலமான சிறகுகளும், அதன் பிரம்மாண்டமான உருவமும் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தக் காணொளியைப் பார்த்த பலரும், “நிஜமாவே இவ்வளவு பெரிய வவ்வால் உலகில் இருக்கிறதா?”, “சினிமாவில் வரும் கற்பனை உருவம் போல இருக்கிறது” என்று வியப்புடன் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை இவ்வளவு பெரிய வவ்வாலை நேரிலோ அல்லது புகைப்படத்திலோ பார்த்ததே இல்லை எனக் கூறும் நெட்டிசன்களால், இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.