தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கியிருந்தும் கூட சரியான வாய்ப்பில்லாமல் இருப்பார்கள். அதில் வெங்கட் பிரபு முக்கியமானவர். அஜித்தை வைத்து மங்காத்தா கொடுத்தவர் இவர். எனவே சூர்யா, கார்த்தி ஆகியோர் இவருக்கு கால்ஷீட் கொடுத்தார்கள். ஆனால் அந்த படங்கள் ஓடவில்லை. அதன்பின் சில வருடங்கள் கழித்து சிம்புவை வைத்து மாநாடு படத்தை கொடுத்தார்.
அஜித், விஜய் போன்ற நடிகர்களை வைத்து படமெடுக்க பல வருடங்கள் முயற்சி செய்தார். விஜய் இவரின் கதையை ஓகே சொல்ல கோட் படம் உருவானது. இந்த படம் வெளியாகி ஒரு வருடம் முடிந்துவிட்ட நிலையில் இன்னமும் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தை துவங்கவில்லை.
கோட் படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோதே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்கும் ஒரு படம் பேசப்பட்டது. ஆனால் அமரன் படத்திற்கு பின் மதராஸி, பராசக்தி படங்களில் நடிக்கப் போய்விட்டார் சிவகார்த்திகேயன். இதனால், வெங்கட்பிரபு சில மாதங்கள் காத்திருந்தார்.
திடீரென பேஷன் ஸ்டுடியோ சுதர்ஷன் தயாரிப்பில் டான் பட இயக்குனர் சிபி சக்ரவரத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்தார். வெங்கட் பிரபு பலமுறை அழைந்தும் சிவகார்த்திகேயன் பிடி கொடுக்கவில்லை. பணப்பிரசனையால் சிபி சக்கரவர்த்தி படம் டிராப் ஆகிவிட வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்தார் சிவகார்த்திகேயன்.
சமீபத்தில் சிவகார்த்திகேயனை கூட்டிக்கொண்டு அமெரிக்கா போனார் வெங்கட்பிரபு. ஏனெனில் இது ஒரு சயின்ஸ் திரைப்படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் இந்த படத்துக்கு கட்டையை போட்டு இருக்கிறார் சுதர்ஷன். சிவகார்த்திகேயனை சந்தித்து படத்திற்கு தேவையான பணத்தை ரெடி செய்து விடுகிறேன் எனக்கு நீங்கள் கால்ஷீட் கொடுங்கள் என கேட்க சிவகார்த்திகேயன் சிபி இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.
இந்த படத்தை முடித்துவிட்டு உங்கள் படத்தில் நடிக்கிறேன் என சிவகார்த்திகேயன் சொல்லிவிட்டால் இன்னும் பல மாதங்கள் வெங்கட் பிரபு காத்திருக்க வேண்டியிருக்கும். அல்லது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கும் வாய்ப்பிருக்கிறது.