திமுக தீய சக்தியா?.. தவெக ஒரு கொலைகார சக்தி.. டி.கே.எஸ்.இளங்கோவன்...
WEBDUNIA TAMIL December 19, 2025 07:48 AM


தவெக தலைவர் விஜய் இன்று ஈரோடு பெருந்துறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய விஜய் வழக்கம் போல் திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார். தேர்தல் நேரத்தில் திமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இவர்களுக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.. விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை.. மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.. பெரியாரின் கொள்கை பின்பற்றுகிறோம் என சொல்லி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஏதாவது கருத்து சொன்னால் சினிமா வசனம் பேசுகிறேன்.. பன்ச் வசனம் பேசுகிறேன் என்கிறார்கள்.. ஆனால் சமீபத்தில் முதல்வர் ஒரு விழாவில் ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்களே’ என பேசினார். அது என்னா சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்தத?.. நான் பேசினால் சினிமா வசனம்.. இவர்கள் பேசினால் மட்டும் அது என்ன சிலப்பதிகாரமா?..

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் திமுகவி ஒரு வார்த்தையில் கடுமையாக விமர்சிப்பார்கள்.. ‘இப்படி கடுமையான வார்த்தையை பயன்படுத்த வேண்டுமா?’ என்று நான் பலமுறை யோசித்துள்ளேன். ஆனால் இவர்களை பார்க்கும்போதுதான் அவர்கள் ஏன் இப்படி சொன்னார்கள் என்று எனக்கு புரிகிறது.. எம்ஜிஆரும், ஜெயலலிதா மேடமும் சொன்ன அதே வார்த்தையை நானும் சொல்கிறேன்.. திமுக ஒரு தீய சக்தி.. ஆனால் தவெக ஒரு தூய சக்தி.. 2026-ல் திமுக என்கிற தீய சக்திக்கும் தவெக என்கிற தூய சக்திக்கும் இடையேதான் போட்டியே’ என விஜய் ஆவேசமாக பேசினார்.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் ‘ கரூரில் விஜயை பார்ப்பதற்காக 12 மணி முதலே மக்கள் காத்திருந்தார்கள்.. ஆனால் ஏழரை மணிக்குதான் போனார்.. அதனால் தண்ணீர், சாப்பாடு இல்லாமல் 41 பேர் உயிரிழந்தார்கள்.. திமுக தீய சக்தி அல்ல.. தவெகதான் கொலைகார சக்தி.. 41 மக்களை கொன்ற கட்சி அது.. கரூர் கூட்டத்திற்கு ஏன் தாமதமாக போனோம் என விஜய் சொல்ல மாட்டார்.. அப்படி அவர் உண்மையை சொன்னால் மக்கள் அவரை தூக்கி எறிந்து விடுவார்கள்’ என்று பேசியிருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.