சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வாலிபர் ஒருவர் தனது தோள்பட்டையை ரப்பரைப் போல வளைத்து காட்டும் வினோதமான திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில் அந்த நபர் தனது தோள்பட்டையை மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் திருப்புவதைக் காண முடிகிறது.
இதைப் பார்க்கும் பலரும் அவரது உடலில் எலும்பு இருக்கிறதா அல்லது அது ரப்பரால் ஆனதா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சாதாரண மனிதரால் செய்ய முடியாத இந்த அபூர்வ சாகசம், இணையவாசிகளைத் திகைக்க வைத்துள்ளது.
“>
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த 11 விநாடி வீடியோவை இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்த நிலையை எட்ட அவர் எவ்வளவு கடினமாகப் பயிற்சி செய்திருப்பார்?” என்றும், “எக்ஸ்ரே எடுத்தால் கூட மருத்துவர்கள் குழம்பிப் போவார்கள்” என்றும் வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் உடலை வில்லாக வளைக்கும் இந்த இளைஞனின் அபூர்வமான நெகிழ்வுத்தன்மை, சமூக ஊடகங்களில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.