அமெரிக்காவில் கர்ப்பிணிக்கு நேர்ந்த சம்பவம்…குடியேற்ற முகவரின் கொடுஞ்செயல்!
TV9 Tamil News December 19, 2025 07:48 PM

அமெரிக்காவின் மினியாபோலிஸில் ஒரு பெண்ணை அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க முகவர்கள் தரையில் இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க முகவர்கள் கர்ப்பமாக உள்ள அந்த பெண்ணை சாலையில் தரதரவென இழுத்துச் செல்வதை பார்த்த அந்தப் பகுதியில் இருந்த பொது மக்கள் அந்த நபர்கள் மீது பனிக் கட்டிகளை வீசியும், அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் கூச்சலிடுகின்றனர். ஆனால், அதை காதில் வாங்காத அந்த முகவர்கள் அந்த பெண்ணை தரதரவென இழுத்து செல்கின்றனர். அப்போது, அந்தப் பெண் காரின் கீழே சிக்கி கொண்டு கூச்சிலிடுகிறார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதற்றமான சூழலை தடுக்க நடவடிக்கை இல்லை

இது தொடர்பாக இனியாபோலிஸ் காவல்துறை தலைவர் பிரையன் ஓ ஹாரா கூறுகையில், கர்ப்பிணி பெண்ணை முகவர்கள் இழுத்து சென்ற சம்பவத்தில் அருகில் இருந்த பொது மக்கள் அந்த முகவர்களை நோக்கி கூச்சலிட்டு, அந்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் பனிக்கட்டிகளை வீசியுள்ளனர். இந்த பதற்றமான நிலையை தணிக்க அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க முகவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.

மேலும் படிக்க: விரைவான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.. பிரதமர் மோடி பெருமிதம்!

அமெரிக்க குடியேற்ற சுங்க அமலாக்க முகவர் மீது குற்றம்

கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் அதிகாரிகளுக்கு பதட்டத்தை குறைப்பது குறித்து தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முக மூடிகள் மற்றும் அடையாளம் இடப்படாத ஆடைகளுடன் தங்கள் அடையாளங்களை மறைப்பது உள்பட பயத்தை தூண்டும் நடைமுறையாக இருப்பதாக அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க முகவர்கள் மீது குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவில் சோமாலிய குடியேறிகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் மின சோட்டாவின் இரட்டை நகரங்களான மினியாபோலிஸ் மற்றும் செயிண்ட்பால் ஆகிய இடங்களில் குடியேற்ற அமலாக்கத்தை அதிகரித்துள்ள நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் சோமாலிய குடியேறிகள் உள்பட அதிகளவிலான மோசடி திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், அங்குள்ள சோமாலிய குடியேறி மக்களை “குப்பை” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருந்தார்.

பலதரப்பினரிடமிருந்து குவியும் கண்டனம்

மேலும், அவர்களை நாடு கடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். கர்ப்பிணி பெண்ணை அமெரிக்க குடிவரவு சுங்க அமலாக்க முகவர்கள் சாலையில் இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதுடன், அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கண்டனம் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க: தலையை துளைத்துச்சென்ற துப்பாக்கி குண்டு.. உஸ்மான் ஹாடி மரணம்.. மீண்டும் வன்முறைக்களமாகும் வங்கதேசம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.