இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு வேடிக்கையான காணொளி பலரையும் சிரிக்க வைத்து வருகிறது. கூட்ட நெரிசல் மிகுந்த ஒரு ரயிலில், நபர் ஒருவர் எப்படியாவது நிம்மதியாகப் பயணம் செய்ய வேண்டும் என்று ஒரு வினோதமான முயற்சியை மேற்கொள்கிறார். சுமார் 20 நிமிடம் கஷ்டப்பட்டு, ரயிலின் கம்பிகளுக்கு இடையே ஒரு துணியை வைத்துத் தொட்டில் போலக் கட்டுகிறார். இதைப் பார்த்த மற்ற பயணிகள் அவர் என்ன செய்யப் போகிறார் என்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
View this post on Instagram
A post shared by Vikas Eloriya Patidar (@vikas.eloriya)
தொட்டிலை கட்டி முடித்த அந்த நபர், மிகவும் நிதானமாக அதில் ஏறி அமர்கிறார். ஆனால், அவர் அமர்ந்த அடுத்த சில வினாடிகளிலேயே, அந்தத் தொட்டில் பாரம் தாங்காமல் அப்படியே அறுந்து அவர் கீழே விழுகிறார். கஷ்டப்பட்டுத் தொட்டில் கட்டிய நேரத்தை விட, அவர் அதில் அமர்ந்திருந்த நேரம் மிகக் குறைவு என்பதால், இந்தக் காட்சியைப் பார்ப்பவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். இந்த வேடிக்கையான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.