வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு விருப்பமான ஐந்து மலர்களை படைத்து வழிபடுவதால், வாழ்க்கையில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் என சொல்லப்படுகிறது.
மகாலட்சுமிக்கு விருப்பமான 5 மலர்கள் : 1. மல்லிகை :மகாலட்சுமிக்கு வாசனை மிகுந்த மலர்கள் மிகவும் பிடிக்கும். அதனால் மல்லிகை அவருக்கு பிடித்தமான மலராக கருதப்படுகிறது. வெள்ளை நிறம் அமைதி மற்றும் ஒற்றுமையை குறிக்கக் கூடிய நிறம் என்பதால் மல்லிகை பூவை மகாலட்சுமிக்கு அணிவிப்பதால் அவரது மனம் மகிழ்ந்து குடும்ப ஒற்றுமை, அன்பு, வளம் ஆகியவை நிலைத்திருக்க அருள் செய்வார். கூடுதலாக மல்லிகைப்பூவை மகாலட்சுமிக்கு அணிவிப்பதால் பொருளாதாரத்தில் நிலைத்தன்மை, வெற்றி ஆகியவை குறைவில்லாமல் பெருகிக் கொண்டே இருக்கும்.
2. தாமரை மலர் :தாமரை மலர் மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரே ஒரு தாமரை மலர் படைத்து வழிபட்டாலும் உங்களின் வழிபாட்டையும், வேண்டுதலையும் மகாலட்சுமி ஏற்றுக் கொள்வார் என சொல்லப்படுகிறது. அதிலும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு தாமரை மலர் படைத்து வழிபட்டால் செல்வ வளம், அமைதி, நிம்மதி, வளம் ஆகியவற்றை அருள்வார். அனைத்து விதமான பொருளாதார பிரச்சனைகளில் இருந்தும் விடுபட முடியும். அது மட்டுமல்ல மகாலட்சுமிக்கு தொடர்ந்து தாமரை படைத்து வழிபட்டால், அமைதியான, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.
3. சாமந்திப் பூ :சாமந்திப் பூ என்பது மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான மலர்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. அதன் மங்களகரமான நிறம், மணம் ஆகியவை மகாலட்சுமிக்கு விருப்பமானதாக சொல்லப்படுகிறது. இந்த பூவை மகாலட்சுமிக்கு படைத்து வழிபடுவதால் அதிர்ஷ்டம், அதிக அளவிலான நன்மைகள் வீட்டிற்கு வந்து சேரும். அதோடு வீட்டில் இருக்கும் தீய சக்திகளை இது வெளியே விரட்டி விடும்.
4.செம்பருத்தி :சிவப்பு நிற செம்பருத்தி மலரை மகாலட்சுமிக்கு படைப்பது மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இது பலம், ஆற்றல் ஆகியவற்றின் அடையாளமாக ஆன்மீகத்தில் கருதப்படுவதால் அனைத்து தெய்வங்களுக்கும் ஏற்ற மலராக செம்பருத்தி கருதப்படுகிறது. இதனால் இந்த மலரை மகாலட்சுமிக்கு படைத்து வழிபட்டால் செல்வ வளம், பலம், அழகு, பெருக்கம் ஆகியவற்றை தரும். லட்சுமி பூஜையின் போது இந்த மலரை பயன்படுத்தினால் வெற்றியும், நிறைவாக வளமையும் கிடைக்கும்.
5. ரோஜா :சிவப்பு மற்றும் வெள்ளை நிற ரோஜா மலர்களை மகாலட்சுமிக்கு படைத்து வழிபடுவதால் அவரது மனம் மகிழும். இந்த மலர்களை வெள்ளிக்கிழமைகளில் படைத்து வழிபட்டால் வீட்டில் அமைதியும், தூய்மையும் நிலவும். அதோடு பொருளாதார நிலை உயரும். வேலைகளில் இருக்கும் தடைகள் அகலும். குறிப்பாக பெண்கள் சிவப்பு செம்பருத்தியை மகாலட்சுமிக்கு படைத்து வழிபட்டால் திருமணத்தில் இருக்கும் தடைகள் விலகும்.