தங்கம் விலை கடந்த 12-ஆம் தேதி முதல் கணிக்க முடியாத வேகத்தில் ஏற்றம் காணத் தொடங்கியது. குறிப்பாக, 15-ஆம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்வு கண்ட தங்கம், இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120 என்ற இமாலய உச்சத்தை எட்டியது.
இந்த உச்சத்தைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம்–இறக்கம் என அலைபாயும் நிலையில் இருந்து வருகிறது. அந்த வரிசையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12,380 என்றும், ஒரு சவரன் ரூ.99,040 என்றும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் மீண்டும் சிறு எழுச்சி ஏற்பட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.99,200 என விற்பனையாகிறது.
அதேபோல், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,400 என்ற விலையில் விற்கப்படுகிறது.மற்றொரு புறம், வெள்ளி விலை கட்டுப்பாடின்றி பாய்ந்து, தினந்தோறும் புதிய வரலாற்று உச்சங்களை பதிவு செய்து வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5,000-ம் உயர்ந்து,
ஒரு கிராம் ரூ.226 என்றும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 26 ஆயிரம் என்றும் விற்பனையாகி வருகிறது.
தங்கம்–வெள்ளி விலைகளின் இந்த அதிரடி ஏற்றத் தாழ்வுகள், முதலீட்டாளர்களையும், நகை வாங்குவோரையும் ஒரே நேரத்தில் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.