கொம்புசீவி;
பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் கொம்புசீவி. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. படத்தில் சரத்குமார் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த நிலையில் படத்தை பற்றி பிரபல திரை விமர்சகர் புளூசட்டை மாறன் அவருடைய விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்.
படத்தில் வைகை அணையை சுற்றியுள்ள சில கிராமங்களை காட்டுகிறார்கள். அங்குள்ள மக்களுக்கு என்ன வேலை என்றால் அணையில் தண்ணி இருந்தால் விவசாயம் பார்க்க மாட்டார்கள். தண்ணி இல்லையென்றால் அந்த பகுதியை விவசாயத்திற்கு பயன்படுத்தி விவசாயம் பண்ணுவார்கள். இதற்கிடையில் மற்ற நேரம் கஞ்சா வியாபாரம் செய்கிறார்கள்.இப்படி இந்த தொழிலில் டான் – ஆக இருக்கக் கூடியவர்தான் சரத்குமார்.
அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் அம்மா அப்பா இல்லாத ஒரு ஹீரோ வலது கையாக அமைகிறார். இவங்க இரண்டு பேருமா சேர்ந்து கஞ்சா கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் இவருக்கு ஒரு பெரிய ஆர்டர் கிடைக்கிறது. இதை சம்மதித்து செய்ய இறங்கும் போது உயரதிகாரியிடமிருந்து பெரிய பிரஷ்ஷர் வருகிறது. அதன்பிறகு என்னாச்சு அப்படிங்கிறதுதான் இந்தப் படத்தின் கதை.
படத்தை முழுவதும் பார்த்த பிறகுதான் இதற்குள் ஒரு அற்புதமான கதை இருப்பதே எல்லாருக்கும் தெரியவருகிறது. அதாவது சில நிலங்களை கையகப்படுத்திதான் அணையை கட்டமுடியும். அப்படித்தான் இந்த வைகை அணைக்குள் 12 கிராமங்கள் இருந்திருக்கின்றன. அந்த கிராம மக்களை அப்புறப்படுத்திதான் அந்த அணையை கட்டியிருக்கிறார்கள். அந்த கிராம மக்கள் வாழ்வாதாரம் தேடி வெவ்வேறு பகுதிகளுக்கு செல்லும் போது கஞ்சா வியாபாரம் செய்திருக்கிறார்கள். அதில் என்ன தவறு என அவங்க தரப்பு நியாயமாக இருக்கிறது.
இதை இவங்க படத்தில் சொல்லும் போது ஹீரோவும் சரத்குமாரும் கஞ்சா கடத்திக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் இடையில் ஒரு உயரதிகாரி வருகிறார். அவர்தான் வில்லன்னு காட்டிக்கிட்டு இருக்கிறார்கள். வாழ்வாதாரத்தை துலைத்துவிட்டுத்தான் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என அழுத்தி சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. அதை மேம்போக்காக சொல்லிவிட்டு இதுதான் கதைனு சொல்லியிருக்கிறார்கள்.
இதுதான் படத்தின் பலவீனமாக போய்விட்டது. இந்த கதையில் சீரியஸான பகுதியை காமெடியாக காட்டிவிட்டு காமெடியான பகுதியை சீரியஸாக காட்டியிருக்கிறார்கள்.அதுவும் முழுபடத்தில் எந்தவொரு கேரக்டரையும் ஆழமாக எழுதவில்லை. இப்படி படத்திற்கு ஸ்ட்ராங்கா இருந்த கதையை இவங்களே மாற்றி வைத்துவிட்டார்கள் என புளூசட்டை மாறன் விமர்சித்திருக்கிறார்.