கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகம் பாண்டியன் நடித்து நேற்று வெளியான திரைப்படம் கொம்புசீவி. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற காமெடியான திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். பொன்ராம் திரைப்படங்கள் என்றாலே அதில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அதே நேரம் ஃபேமிலி சப்ஜெக்ட்டை மையப்படுத்தியும் அவருடைய படங்கள் இருக்கும்.
இப்படி கொம்பு சீவி திரைப்படமும் எல்லா வகை உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய படமாக வெளியாகி இருக்கின்றன. சண்முக பாண்டியன் இதற்கு முன் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் அவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை. எனவே கொம்பு சீவி திரைப்படம் அவருக்கு ஹிட் கொடுக்க வேண்டும் என விஜயகாந்த ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
இந்த படத்தில் சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். நடிகை தர்ணிகா இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். இவர் நாட்டாமை படத்தில் டீச்சர் கேரக்டரில் நடித்த ராணியின் மகள்தான் இந்த தர்ணிகா. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தில் அமைந்த ஆக்சன் காட்சிகளை பார்க்கும் பொழுது விஜயகாந்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அது மட்டும் அல்ல. சரத்குமாரும் செட்டில் சண்முக பாண்டியனுடன் பணிபுரியும் பொழுது விஜயகாந்துடன் இருப்பது மாதிரியான ஒரு உணர்வு தான் எனக்கு இருந்தது என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பொன்ராம் பேசும் பொழுது அவரிடம் சண்முக பாண்டியவை வைத்து போலீஸ் சப்ஜெக்டை மையப்படுத்தி ஏதாவது படம் எடுக்கிற ஐடியா இருக்கிறதா என ஒரு நிருபர் கேட்டார்.
அதற்கு பொன்ராம் அதற்கு என்ன? மாநகர காவல் படம் மாதிரி இவரை வைத்து ஒரு படம் பண்ணிடுவோம் என கூறியுள்ளார். ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் சண்முக பாண்டியன் வைத்து ரமணா 2 திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் இருப்பதாக கூறினார். இப்போது அந்த லிஸ்டில் மாநகர காவல் திரைப்படமும் இணைந்து இருக்கிறது