செங்கோட்டையன் உடன் விஜய் 3 மணிநேரம் ஆலோசனை! கூட்டத்தை புறக்கணித்த என்.ஆனந்த்... பரபரப்பு பின்னணி
Top Tamil News December 21, 2025 07:48 PM

3 மணி நேரத்திற்கும் மேல் செங்கோட்டையன் உடன் ஆலோசனை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய்.

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அக்கட்சியின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உடன் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த ஆலோசனையில் செங்கோட்டையன், மற்றும் அருண்ராஜ் பங்கேற்றனர்.

எப்போதும் விஜய் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளும் நேரங்களில் கட்சியின் பொதுசெயலாளர் ஆனந்த் உடன் இருப்பார் ஆனால் இன்றைய ஆலோசனையில் ஆனந்த் இறுதி வரை பங்கேற்கவில்லை. பனையூர் அலுவலகத்தில் கட்சி தொடர்பான வேறு பணிகளில் இருந்ததால் ஆனந்த் பங்கேற்கவில்லை என தகவல். இந்த நிலையில் செங்கோட்டையன் உடன் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக மூன்று மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டது என். ஆனந்த ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.