Kiara Advani: யாஷின் டாக்சிக் படத்தில் இணைந்த கியாரா அத்வானி.. வெளியானது கேரக்டர் அறிமுக போஸ்டர்!
TV9 Tamil News December 21, 2025 08:48 PM

கன்னடசினிமாவில் ஆரம்பத்தில் பிபலமான் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் யாஷ் (Yash). இவர் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான கே.ஜி.எஃப் (KGF) என்ற படத்தின் மூலமா மக்களிடையே பிரபலமானார். இந்த திரைப்படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் (Prashanth Neel) இயக்கியிருந்த நிலையில், பான் இந்திய வெற்றியை பெற்றிருந்தது. சின்ஹா படத்தை தொடந்து கே.ஜி.எஃப் சாப்டர் 1 என்ற படத்தில் நடித்த அசத்தியிருந்தார். அந்த வகையில் இவரின் நடிப்பில் ஹாலிவுட் ரேஞ்சில் தயாராகிவரும் திரைப்படம்தான் டாக்சிக் (Toxic: A Fairy Tale for Grown-Ups) . இந்த படத்தை பிரபல இயக்குநர் கீத்து மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்க, இப்படத்தின் கதையை நடிகர் யாஷும் இணைந்து எழுதியுள்ளார். இப்படமானது ஒரு ரெட்ரோ காலத்து கேங்ஸ்டர் கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இந்த இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் நயன்தாரா (Nayanthara), கியாரா அத்வனி (Kiara Advani), ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது கிட்டத்தட்ட 8க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில் இன்று 2025 டிசம்பர் 21ம் தேதியில் நடிகை கியாரா அத்வானியின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் கியாரா அத்வானி “நதியா” (Nadia) என்ற ரோலில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:2026-ம் தமிழ் சினிமாவில் வரிசைக்கட்டும் நடிகை மமிதா பைஜுவின் படங்கள் – லிஸ்ட் இதோ

கியாரா அத்வானியின் கதாபாத்திரம் அறிமுகம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

Introducing @advani_kiara as NADIA in – A Toxic Fairy Tale For Grown-Ups #TOXIC #TOXICTheMovie @thenameisyash #GeetuMohandas @RaviBasrur #RajeevRavi #UjwalKulkarni #TPAbid #MohanBKere #SandeepSadashiva #PrashantDileepHardikar #KunalSharma #SandeepSharma #JJPerry @anbariv… pic.twitter.com/glUFoVh6C1

— KVN Productions (@KvnProductions)

இந்த டாக்சிக் படமானது சுமார் ரூ 600 கோடி பட்ஜெட்டில் தயாராகிவருகிறதாம். இந்த படத்தை தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தை தயாரித்துள்ள, கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, யாஷும் இணைந்து இப்படத்தை தயாராய்த்துள்ளாராம். இந்த படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க, இசையமைப்பாளர் ரவி பஸ்ரூ பின்னணி இசையை சிறப்பாக செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மிகவும் உண்மையானதாகவும் அசலாகவும் உணர்ந்தேன்.. சிறை படத்திற்கு விமர்சனம் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து!

இந்த படமானது பான் இந்திய மொழிகளில் தயாராகிவரும் நிலையில், இந்த படத்தில் யாஷின் கதாபாத்திரம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த படமானது புஷ்பா 2 படத்தின் வசூலையும் முறியடித்து வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.