டிசம்பர் 24ம் தேதி ராக்கெட் ஏவுதல்... பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை!
Dinamaalai December 21, 2025 10:48 PM

 ஸ்ரீஹரிகோட்டாவில் , டிசம்பர் 24-ஆம் தேதி எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்பட உள்ளது இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவ நலத்துறை அறிவித்துள்ளது. இதனால் அந்த நாளில் மீன்பிடி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படும்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், பழவேற்காடு கடல் பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. ராக்கெட் ஏவுதல் மற்றும் சோதனை பணிகள் நடைபெறும் நேரங்களில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் கடல் பகுதியில் குறிப்பிட்ட சுற்றளவில் தடைகள் விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த முறையும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ராக்கெட் ஏவுதல் முடிந்த பிறகு நிலைமை சீரானதும் மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தற்காலிக தடைக்கு மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், பாதுகாப்பே முதன்மை என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.