தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே அளித்துள்ள நேர்காணலில், இந்த நீக்க நடவடிக்கையை ஒரு ஜனநாயக சுத்திகரிப்பாகவே பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மொத்தம் இருந்த 6.40 கோடி வாக்காளர்களில் தற்போது 5.40 கோடியாக குறைந்திருப்பது, போலி வாக்காளர்கள் மற்றும் தகுதியற்றவர்களை அகற்றும் பணியின் ஒரு பகுதி என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நீக்கப்பட்ட 97 லட்சம் பேரில் சுமார் 40 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் என்றும், 50 லட்சம் பேர் முகவரி மாறியவர்கள் என்றும் பாண்டே விளக்கமளித்தார். உயிரிழந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் நீடிப்பது தேர்தல் முறைகேடுகளுக்கே வழிவகுக்கும் என்பதால், இதனை எதிர்ப்பது முறையற்றது என்றார்.
குறிப்பாக, இந்தப் பணிகளை மேற்கொண்டது மத்திய அரசு அல்ல, மாறாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 38 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களே என்பதை அவர் அழுத்தமாக பதிவு செய்தார்.
Edited by Siva