நாடு முழுவதும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டத்திற்கு தற்போது மத்திய அரசு VB-G-Ram G என்று சமீபத்தில் பெயர் மாற்றம் செய்த நிலையில் அந்தத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இனி இந்த திட்டத்திற்கு மாநில அரசுகளும் நிதி பங்களிப்பு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது எனவும் வலியுறுத்தியது. சமீபத்தில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி அனுமதி கொடுத்துள்ளார். மேலும் நாடு முழுவதும் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் தற்போது ஜனாதிபதி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.