2025-ல் 100 சதவீதம் லாபம் தந்த சில்வர் ETF.. சிறந்த வெள்ளி இடிஎஃப்கள் எவை?
TV9 Tamil News December 22, 2025 01:48 AM

2025 தங்கத்தை (Gold) விடவும் வெள்ளிக்கு மிக சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. காரணம், 2025-ல் மட்டும் வெள்ளி விலை (Silver Price) வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி வெள்ளி ரூ.226-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,26,000 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. வெள்ளி விலை இத்தகைய கடுமையான விலை உயர்வை அடைந்துள்ள நிலையில், 2025-ல் வெள்ளி இடிஎஃபில் (ETF – Exchange Traded Fund) முதலீடு செய்தவர்கள் சிறந்த லாபத்தை பெற்றுள்ளனர். அதாவது இந்த ஆண்டு வெள்ளி இடிஎஃபில் முதலீடு செய்தவர்கள் சுமார் 100 சதவீதம் லாபத்தை பெற்றுள்ளனர். இந்த நிலையில், வெள்ளி இடிஎஃபில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2025-ல் 100 சதவீதம் லாபத்தை தந்த வெள்ளி  இடிஎஃப் முதலீடு

வெள்ளி கட்டிகள், நாணயங்கள், நகைகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதை விடவும் வெள்ளி இடிஎஃப்களில் முதலீடு செய்வது தான் சிறந்த முறையாக கருதப்படுகிறது. அவ்வாறு வெள்ளி இடிஎஃப்கள் சிறந்த முதலீடாக உள்ள நிலையில், அதில் முதலீடு செய்தவர்கள் தான் தற்போது 100 சதவீதம் லாபத்தை பெற்றுள்ளனர். உதாரணமாக ஒருவர் 2025-ல் ரூ.1 லட்சத்திற்கு வெள்ளியில் முதலீடு செய்துள்ளார் என்றால் அந்த நபர் தற்போது ரூ.2 லட்சத்திற்கு சொந்தக்காரராக இருப்பார். இத்தகைய சிறப்பான லாபத்தை தான் வெள்ளி இடிஎஃபில் முதலீடு செய்தவர்கள் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க : இரண்டு முக்கிய மாற்றங்களை கொண்டுவந்த EPFO.. இனி ஊழியர்களுக்கு இவற்றில் சிக்கல் இல்லை!

சிறந்த வெள்ளி இடிஎஃப்கள் எவை?

வெள்ளியை நாணயமாகவோ, நகையாகவோ வாங்கும்போது வெள்ளியை தாண்டி நீங்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டும். ஆனால், இடிஎஃப்களில் முதலீடு செய்யும்போது நீங்கள் முதலீடு செய்யும் பணத்தில் 99 சதவீதம் வெள்ளியாக சேமிக்கப்படும். இவ்வாறு லாபகரமான முதலீட்டு திட்டமாக வெள்ளி இடிஎஃப்கள் உள்ள நிலையில், இளைய தலைமுறையினரின் சிறந்த முதலீட்டு திட்டமாக இது உள்ளது. இவ்வாறு வெள்ளி இடிஎஃப்களில் முதலீடு செய்யும் பட்சத்தில் பங்குச்சந்தை நடைபெறும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், இதனை விற்பனை செய்து லாபம் பெறலாம்.

இதையும் படிங்க : PPF : ரூ.3,000 இருந்தால் போதும்.. இந்த திட்டத்தில் முதலீடு செய்து லட்ச கணக்கில் லாபம் பெறலாம்!

நிப்பான் இந்தியா சில்வர் இடிஎஃப், ஐசிஐசிஐ புருடென்ஷியல் சில்வர் இடிஎஃப், ஆதித்யா பிர்லா சன் லைஃப் சில்வர் இடிஎஃப், ஹெச்டிஎஃப்சி சில்வர் இடிஎஃப், கோடக் சில்வர் இடிஎஃப் ஆகியவை தற்போது புகழ்பெற்ற இடிஎஃப்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.