தமிழ் சினிமாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ரகு தாத்தா. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் சுமன் குமார் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி வேடத்தில் நடித்து இருந்த நிலையில் நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி, ஆனந்தசாமி, ராஜீவ் ரவீந்திரநாதன், ஜெயக்குமார், ஆதிரா பாண்டிலட்சுமி, ஜானகி, ராஜேஷ் பாலச்சந்திரன், இஸ்மத் பானு, கே.எஸ்.மிப்பு, முகேஷ், சூ கோய் ஷெங், மனோஜ் குமார் கலைவாணன், சச்சின் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர் தயாரித்து இருந்தார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படத்தின் கதை என்ன?பீரியட்டிக் படமாக வெளியான இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் தமிழ் பற்றாளராகவும் இந்தி திணிப்பை எதிர்பார்ப்பவராகவும் இருப்பார். இப்படி இருக்கும் சூழலில் க பாண்டி என்ற புணைப்பெயரில் தொடர்ந்து கதைகளை எழுதி வருகிறார். அது இவர்தான் என்பது அந்த ஊரில் இருக்கும் பலருக்கும் தெரியாது. இந்த நிலையில் நடிகர் ரவீந்திர விஜய் கீர்த்தி சுரேஷை காதலித்து வருகிறார்.
Also Read… 2026-ம் தமிழ் சினிமாவில் வரிசைக்கட்டும் நடிகை மமிதா பைஜுவின் படங்கள் – லிஸ்ட் இதோ
அவரை திருமணம் செய்யவேண்டும் என்பதற்காகவே போலியாக நடித்து திருமணத்திற்கு சம்பதிக்க வைக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் ரவீந்திர விஜய் குறித்து உண்மையை தெரிந்துகொள்ளும் கீர்த்தி திருமணத்தை நிறுத்த பல திட்டங்களை போடுகிறார். அதில் இறுதியில் வெற்றியடைந்தாரா இல்லாரா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… படப்பிடிப்பை முடித்தது தனுஷின் D 54 படக்குழு… வைரலாகும் போஸ்ட்