சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் திராவிடக் கட்சிகள் குறித்து மிகவும் அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தான் கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் இருப்பதாகவும், அதற்கு முன்பாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளிலும் பயணித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில், “திமுக மற்றும் அதிமுகவில் இருப்பவர்கள் பெண்களின் மார்பகத்தைப் பார்த்துப் பேசுபவர்கள்” என எவ்விதத் தயக்கமுமின்றி பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
பெண்களுக்கு அந்த இரு கட்சிகளிலும் கண்ணியம் இல்லை என்று சாடிய அவர், நாம் தமிழர் கட்சியில் மட்டுமே தங்களுக்கு உண்மையான பாதுகாப்பு கிடைப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். “மற்றவர்கள் பெண்களின் மார்பகத்தைப் பார்த்துப் பேசும் நிலையில், நாம் தமிழர் தம்பிகள் மட்டும் தான் பெண்களின் கண்களைக் கூட பார்க்காமல், கால்களைப் பார்த்துப் பேசும் ஒழுக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்” என அவர் பேசியுள்ள இந்த விவகாரம் இணையத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.