இந்தியர்களுக்கே உரித்தான சமயோசித புத்திக்கு இணை ஏதுமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக பெண்கள் தங்களின் வளையல்களைப் பாதுகாப்பாக அடுக்க விலை உயர்ந்த பாக்ஸ்களைத் தேடுவார்கள்.
ஆனால், இந்த வீடியோவில் உள்ள பெண், நாம் குப்பையில் போடும் ஒரு காலி பிளாஸ்டிக் பாட்டிலை வைத்தே வளையல்களை அடுக்க ஒரு சூப்பர் பாக்ஸை உருவாக்கி அசத்தியுள்ளார். பாட்டிலை லாவகமாக இரண்டாக வெட்டி, அதற்குள் வளையல்களை வரிசையாக அடுக்கிவிட்டு மீண்டும் மூடிவிடுகிறார்.
வெறும் 20 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவை இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து வியந்துள்ளனர். “இவ்வளவு சின்ன ஐடியா நமக்குத் தோன்றாமல் போய்விட்டதே!” என்றும், “வீணாக விலை உயர்ந்த பாக்ஸ்களை வாங்கிப் பணத்தை விரயம் செய்துவிட்டோமே!” என்றும் நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கத்தை வேடிக்கையாகப் பகிர்ந்து வருகின்றனர்.
பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதுடன், பணத்தையும் மிச்சப்படுத்தும் இந்த எளிய வீட்டு உபயோகக் குறிப்பு இப்போது பல இல்லத்தரசிகளின் ஃபேவரைட் வீடியோவாக மாறியுள்ளது.