தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையனுடன் ரகசிய ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையின் போது கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் இல்லை என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற இந்த ரகசிய கூட்டத்தில், செங்கோட்டையனுடன் விஜய் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக தீவிர ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது தேர்தல் பரப்புரை வியூகங்கள் மற்றும் சில முக்கியமான உட்கட்சி விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையை தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தில் சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் மூத்த ஆலோசகராக பார்க்கப்படும் செங்கோட்டையனின் ஆலோசனைகளுக்கு விஜய் அதிக முக்கியத்துவம் அளிப்பது, கட்சியின் எதிர்கால நகர்வுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
Edited by Siva