ரஜினி தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ஜெயிலர். விமர்சன ரீதியாகவும் படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியில் படக்குழு இறங்கியது. இப்போது ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடித்து வருகிறார். முதல் படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், சுனில் என முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.
அதுபோக சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரப் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான ஜெயிலர் படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை பெற்று பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றியை பெற்றது. அப்பவே அதன் இரண்டாம் பாகம் பற்றி அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறார்கள்.
ஜெயிலர் 2 படத்தில் வித்யாபாலன் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் சந்தானமும் இந்தப் படத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் இந்தப் படத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பாலகிருஷ்ணாவுக்கு பதில் விஜய் சேதுபதி படத்தில் இணைந்திருக்கிறார் என்ற ஒரு தகவல் வெளியானது.
இந்த நிலையில் காவாலா பாடல் மாதிரியே ஜெயிலர் 2 படத்திலும் ஒரு பாடல் இருக்கும் என்று தெரிவித்திருந்தார்கள். ஆனால் இப்போது வந்த தகவலின் படி காவாலா பாடலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அந்தப் பாடல் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த பாடலில் கன்னட நடிகை ஒருவர் ஆடியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருந்தார்கள்.
ஆனால் இப்போது வந்த தகவலின் படி ஜெயிலர் 2 படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் 12 புதன் கிழமை. வெள்ளிகிழமை சுதந்திர தினம் என்பதால் தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் வசூலை பெருசாக அள்ளலாம் என்ற பெரிய திட்டத்தோடுதான் இந்த தேதியில் வருவதாக சொல்லப்படுகிறது.