சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக வனவிலங்குகளிடம் விளையாட்டுத் தனமாக நடந்துகொள்பவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சாலையில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த ஒரு குரங்கைப் பார்த்த இளம்பெண், அதனிடம் வம்பு செய்யத் தொடங்கினார்.
குரங்குடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்ட அந்தப் பெண், தனது தோழியிடம் வீடியோ எடுக்குமாறு கூறிவிட்டு, குரங்கின் மிக அருகில் சென்று தனது முகத்தை வினோதமாக வைத்து ‘பவுட்’ (Pout) கொடுத்துக் கிண்டல் செய்தார்.
ஆனால், அமைதியாக இருந்த அந்த குரங்கு, பெண்ணின் செயலால் எரிச்சலடைந்து சற்றும் எதிர்பாராத நேரத்தில் மின்னல் வேகத்தில் அவர் மீது பாய்ந்து தாக்கியது.
View this post on Instagram
குரங்கு திடீரெனத் தாக்கியதைக் கண்டு அந்தப் பெண் மரண பயத்தில் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். வெறும் சில நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ, தற்போது இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.
“விலங்குகள் அமைதியாக இருந்தாலும் அவை எப்போது ஆக்ரோஷமாகும் என்று சொல்ல முடியாது, தேவையில்லாமல் அவற்றைத் தொந்தரவு செய்யாதீர்கள்” எனப் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ, “சும்மா இருந்த சிங்கத்தைச் (குரங்கை) சொரிந்துவிட்டு இப்போது இப்படி ஓடுகிறாரே!” என அந்தப் பெண்ணை ஜாலியாகக் கிண்டல் செய்து வருகின்றனர்.