மத்திய அரசு மகாத்மா காந்தியின் பெயரில் இருந்த திட்டத்தின் பெயரை மாற்றிய நிலையில், அதே காந்தி பெயரில் மற்றொரு புதிய திட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில அரசின் வேலை உறுதித் திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை சூட்டி முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்துள்ள இந்த அதிரடி முடிவிற்கு, எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
முன்னதாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மம்தா பானர்ஜி தனது மாநில திட்டத்திற்கு மீண்டும் காந்தி பெயரை சூட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva