பீகார் மாநிலம் கயை மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், ஒரு கும்பல் மற்றொரு நபரைத் துரத்திச் செல்வதும், அதில் ஒருவர் துப்பாக்கியால் சுடுவதும் தெளிவாகத் தெரிகிறது.
பின்னர் இரு தரப்பினரும் தடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபடுகின்றனர். இந்த வன்முறைச் சம்பவம் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. கயை மாவட்டத்தின் பெயரை ‘கயாஜி’ என மாற்றியதால் மட்டும் குற்றங்கள் குறைந்துவிடாது என்றும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
“>
குற்றவாளிகளுக்குப் பயமே இல்லை என்பதை இந்தச் சம்பவம் காட்டுவதாகக் கூறியுள்ள எதிர்க்கட்சிகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டதாகத் தெரிவித்துள்ளன.