திடீரென உயர்ந்த தக்காளி, வெங்காயம்… இல்லத்தரசிகள் அதிர்ச்சி
Dinamaalai December 21, 2025 10:48 PM

 

காய்கறி சந்தையில் தவறாமல் வாங்கப்படும் தக்காளி, வெங்காயம் சில வாரங்களுக்கு முன் வரை மிகக் குறைந்த விலையில் இருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.10–12க்கும், வெங்காயம் ரூ.20–25க்கும் விற்றது. பை நிறைய வாங்கிச் சென்ற மக்கள், இந்த விலைக்கு மகிழ்ந்தனர்.

ஆனால் தற்போது திடீரென விலை உயர்ந்துள்ளது. தக்காளி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரை, வெங்காயம் ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனையாகிறது. 3 கிலோ வெங்காயம் ரூ.100 என நிலை மாறியுள்ளது. இதனால் மக்கள் குறைந்த அளவிலேயே வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பனியின் தாக்கத்தால் செடிகளில் காய்கறிகள் பாதிக்கப்பட்டதே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் ரூ.30–35, சின்ன வெங்காயம் ரூ.60–70, தக்காளி ரூ.25–35, பச்சை மிளகாய் ரூ.60, உருளைக்கிழங்கு ரூ.45 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.250 ஆக விற்பனையாகி அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் வரும் நாட்களில் காய்கறி விலை இன்னும் உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.