சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில், தன்னை கடித்த கொசுவை பாலித்தீன் பையில் பிடித்து மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்ற இளைஞர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த இளைஞர், தன்னை கடித்த கொசு டெங்கு நோயை பரப்பும் வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சத்தில், அந்த கொசுவை பிடித்து பாலித்தீன் பையில் அடைத்து மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
அங்கு, அந்த கொசுவை உடனடியாக பரிசோதிக்க வேண்டும் எனக் கோரி அவர் வலியுறுத்தியதுடன், சிறிது நேரம் போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, அழைக்கப்பட்ட மருத்துவர்கள் அந்த கொசுவை பரிசோதித்தனர். பரிசோதனையில், அது டெங்கு கொசு அல்ல, சாதாரண கொசு என்பதும் உறுதியாகியது.
View this post on Instagram
A post shared by Thanthi TV (@thanthitv)
இதையடுத்து, அந்த இளைஞர் நிம்மதி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, மாநகராட்சியின் கொசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஆகாஷ் திவாரி விமர்சனம் செய்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.