மலையாள சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே அறிமிகம் ஆனார் நடிகை மமிதா பைஜூ. தொடர்ந்து மலையாள சினிமாவில் இரண்டாம் நாயகியாகவும், நாயகியின் தோழியாகவும் நடித்து வந்த நடிகை மமிதா பைஜூ அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நாயகியாக நடித்து வந்த நடிகை மமிதா பைஜூ கடந்த 2024-ம் ஆண்டு வெளியான பிரேமலு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார். மலையாள சினிமாவில் இந்தப் படம் வெளியாகி இருந்தாலும் தென்னிந்திய சினிமா ரசிகரக்ளுக்கு மத்தியில் நடிகை மமிதா பைஜுவிற்கு பிரபலத்தை தனதது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை மமிதா பைஜுவிற்கு தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
அதன்படி இந்த 2025-ம் ஆண்டில் நடிகை மமிதா பைஜூ நடிப்பில் தமிழ் சினிமாவில் டியூட் படம் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் நடிகையாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் மட்டும் இன்றி தமிழில் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை மமிதா பைஜூ. அதன்படி அடுத்த ஆண்டு தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல் குறித்து தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வரிசைக்கட்டும் நடிகை மமிதா பைஜுவின் படங்கள்:இந்த நிலையில் வருகின்ற 2026-ம் ஆண்டில் மட்டும் நடிகை மமிதா பைஜூவின் நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் வெளியாக உள்ளது. அதன்படி ஜன நாயகன், இரண்டு வானம், தனுஷ் 54, சூர்யா 46 ஆகியப் படங்கள் அடுத்த 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் காரணமாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Also Read… விரைவில் வெளியாகும் சூர்யா 47 பட புரோமோ… வைரலாகும் போட்டோ
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:In 2026, #MamithaBaiju will have 4 Tamil films releasing 🎬✨. The shooting for these films has already been completed.
— In #ThalapathyVijay’s #JanaNayagan, Mamitha has played an important role 🌟.
This movie is set to release on January 9th 📅🔥— In #Suriya’s #Suriya46,… pic.twitter.com/Q87yqIvYgH
— Movie Tamil (@_MovieTamil)
Also Read… மலையாள திரையுலக ஜாம்பவான் ஸ்ரீனிவாசன் மறைவு – இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்