சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒரு இளைஞர், தன்னை கடித்த கொசுவை பாலிதீன் பையில் அடைத்துக்கொண்டு நகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. வாமன்ராவ் லாகே வார்டைச் சேர்ந்த தௌ லால் படேல் என்ற அந்த இளைஞர், தன்னை கடித்த கொசுவால் டெங்கு வந்துவிடுமோ என்று அச்சமடைந்துள்ளார்.
மருத்துவரை அணுகியபோது அவர் பரிசோதனை செய்ய அறிவுறுத்தியதால், அந்த இளைஞர் நேரடியாக நகராட்சி சுகாதாரக் குழுவிடம் சென்று தான் கொண்டு வந்த கொசுவை பரிசோதிக்கும்படி கோரிக்கை வைத்தார். அதிகாரிகள் அந்த கொசுவை ஆய்வு செய்ததில், அது டெங்குவை பரப்பாத சாதாரண கொசு என்பது தெரியவந்தது.
“>
இருப்பினும், தனது வார்டில் குப்பைகள் சரியாக அகற்றப்படாததால் கொசுத் தொல்லை அதிகரித்து வருவதாகவும், நகராட்சி நிர்வாகம் தனது கடமையில் இருந்து தவறிவிட்டதாகவும் அந்த இளைஞர் குற்றம் சாட்டினார். அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க அவர் செய்த இந்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.